Our Feeds


Saturday, October 25, 2025

Sri Lanka

க.பொ.த உயர்த்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!


2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்த்திற்கான பொது தகவல் தொழில்நுட்ப (GIT) தேர்வுக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

அனைத்து அதிபர்களும் தங்கள் பாடசாலைக்குறிய அனுமதி அட்டைகளை அந்தந்த வலயக் கல்வித் உதவி கல்வி பணிப்பாளரிடமிருந்து  பெற்றுக்கொள்ளலாம்  என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தபால் மூலம், அவர்களின் தனிப்பட்ட தபால் முகவரிகளுக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளதாக  பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

பரீட்சாத்திகளின் பெயர்கள், பாடங்கள் தொடர்பாக ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியிருந்தால், அத்தகைய மாற்றங்களை உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் செய்யலாம் என்றும் ஆணையாளர் நாயகம் தெரவித்துள்ளார். 

அனைத்து திருத்தங்களும் அக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் செய்துக்கொள்ள வேண்டும் எனவும் பரீட்சாத்திகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 10ம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை, நாடு முழுவதும் உள்ள 2,362 தேர்வு நிலையங்களில் நடைபெறும்.

பொது தகவல் தொழில்நுட்ப ( GIT ) தேர்வு டிசம்பர் 6 ஆம் திகதி 1,665 தேர்வு நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »