இரண்டு வருட யுத்தத்தில் பாலஸ்தீன விடுதலை போராட்ட அமைப்பான ஹமாஸின் 60 சதவீதமான பங்கர்களை அழிக்க முடியாமல் போய்விட்டது. வெறும் 40 வீதத்திற்கும் குறைவான பங்கர்கள் மாத்திரமே அழிக்கப்பட்டது. என, காஸா - இஸ்ரேல் யுத்த நிறுத்தம் தொடர்பான விவகாரங்களை பற்றி ஆராயும் விதமாக இஸ்ரேலுக்கு வருகை தந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி வான்ஸிடம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேலி காட்ஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது இஸ்ரேல் கட்டுப்படுத்தும் காஸாவின் பகுதிகளிலும் ஹமாஸின் பங்கர்கள் இருக்கிறது என்றும் அவற்றை அழிப்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் எனவும் இதன்போது அவர் அமெரிக்க துணை அதிபரிடன் தெரிவித்துள்ளார்.
அல்-ஜஸீரா
