Our Feeds


Tuesday, November 4, 2025

Zameera

சரித ரத்வத்தே பிணையில் விடுவிப்பு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் அவரது சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தேவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது. 



சந்தேகநபரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டார். 




சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதுடன், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »