Our Feeds


Tuesday, November 4, 2025

SHAHNI RAMEES

இலங்கை புகையிரதத் திணைக்களத்தில் பெண் உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

 




இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் புகையிரத

இயந்திர சாரதிகள், புகையிரத பாதுகாப்பு அதிகாரி, புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர் போன்ற பதவிகளுக்கு பெண் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 


25.11.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 4 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.


இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


 165 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள இலங்கை புகையிரத சேவை இலங்கை புகையிரத திணைக்களத்தின் பல்வேறு பதவிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகள் கூட்டாக மேற்கொள்கின்ற சேவையாகும்.


குறித்த திணைக்களத்தின் கீழ் புகையிரத இயந்திர சாரதிகள், புகையிரத பாதுகாப்பு அதிகாரி, புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர் போன்ற பதவிகள் புகையிரத சேவையை பேணிச் செல்வதற்குத் தேவையான பதவிகளாகும்.


மேலும் கண்டறிக

இலங்கை

கொழும்பு

இலங்கையின்

கொழும்பு

Colombo

கொழும்பில்

புகையிரத் திணைக்களத்தின் ஆரம்பம் தொடக்கம் இதுவரை புகையிரத இயந்திர சாரதிகள், புகையிரத பாதுகாப்பு அதிகாரி, புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி போன்ற பதவிகளுக்கு ஆண் உத்தியோகத்தர்கள் மாத்திரம் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டதுடன், கண்காணிப்பு முகாமையாளர் பதவிக்கு 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பெண் உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டனர்.


அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கமைய அரச துறையில் இதுவரை பெண்களை ஆட்சேர்ப்புச் செய்யாத பதவிகளுக்குப் பெண்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறைகளில் பெண் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான ஏற்பாடுகள் இன்மையால், அரசியலமைப்பின் 55 உறுப்புரையின் (1) உப அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கமைய அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு இணங்க புகையிரத இயந்திர சாரதிகள், புகையிரத பாதுகாப்பு அதிகாரி, புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர் போன்ற பதவிகளுக்கு பெண் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »