2026ம் ஆண்டுக்கான கொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் தோல்வியடைந்த நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக இன்று வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஜொஹாரா புகாரி ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.
கடந்த வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்திருந்த நிலையிலேயே இம்முறை ஆதரித்து வாக்களித்துள்ளார். மு.க வின் மற்ற அனைத்து உறுப்பினர்களும் பஜ்ஜட்டுக்கு எதிராக வாக்களித்துள்ளதாக நமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கடந்த வாக்கெடுப்பில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் கட்சி பஜ்ஜட் தோல்வியடைந்த நிலையில் இன்று 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
