தினமும் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவாவதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
புதிய புற்றுநோய் ஆரம்பகால கண்டறிதல் மையத்தின் திறப்பு அங்குரார்பன நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஒவவொரு நாளும் சுமார் 40 நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
இந்த நாட்டில் ஒவ்வொரு நாளும் 15 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
அவர்களில் மூன்று பேர் ஒவ்வொரு நாளும் இறக்கின்றனர்.
20 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் சுய மார்பகப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தால் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் வருடத்திற்கு ஒரு முறையும் மருத்துவ மார்பகப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
