Our Feeds


Tuesday, February 10, 2026

Zameera

ஆண் போன்று வேடமணிந்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 30 வயது பெண் கைது



ஆண் போன்று வேடமணிந்து “களுபாலம் டிலு” என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


கைதுசெய்யப்பட்டவர் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஆவார். சந்தேக நபரான பெண்ணிடமிருந்து சுமார் 150 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹேஷ் மற்றும் குஷ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைதுசெய்யப்பட்ட பெண், தனது தலை முடியை வெட்டிக்கொண்டு ஆண் போன்று வேடமணிந்து “களுபாலம் டிலு” என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »