Our Feeds


Tuesday, March 10, 2026

Zameera

மஹபொல கொடுப்பனவு ரூ.10,000 ஆக உயர்வு


பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பு 2026 ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

2026 ஜனவரி மாதத்திற்குரிய 10,000 ரூபாய் புலமைப்பரிசில் கொடுப்பனவு, நாளை மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

மஹபொல நம்பிக்கை நிதியம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக திறைசேரியினால் கூட்டாக மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவனவிற்கு நிதியளிக்கப்படுகின்றது.

தற்போதுள்ள ஏற்பாடுகளின்படி, 48 வீதம் மஹபொல நம்பிக்கை நிதியத்தாலும், 52 வீதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக அரசாங்கத்தாலும் வழங்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »