Our Feeds


Friday, March 27, 2026

Zameera

ஆட்பதிவுத் திணைக்கள சேவை முடக்கம்


 ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றும் (27) பெருமளவிலான மக்கள் அங்கு பிரவேசித்துள்ளனர். 


கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, மறு அறிவித்தல் வரை அனைத்து பொதுச் சேவைகளும் இன்று (27) முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் நேற்று (26) அறிவித்திருந்தது. 


இவ்வாறானதொரு பின்னணியில், இன்று காலை முதலே ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வருகை தந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 


இவர்களில் சிலர் கடந்த செவ்வாய்க்கிழமை வருகை தந்து தமது பணிகளை முடிக்க முடியாமல் போனவர்களாவர் என குறிப்பிடப்படுகிறது. 


அதேபோல், வெள்ளத்தினால் அடையாள அட்டைகளை இழந்த பாடசாலை மாணவர்களும் வந்திருந்தனர். 


எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்கு அவர்களுக்கு அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »