Our Feeds


Friday, March 27, 2026

Zameera

குவைட் வர்த்தக துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல்


 குவைட்டின் பிரதான வர்த்தகத் துறைமுகமான சுவைக் மீது இன்று (27) ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குவைட் துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஆளில்லா வான்வழி விமானங்கள் துறைமுகத்தை தாக்கி சேதப்படுத்தியதாகவும் இத் தாக்குதலினால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத் துறைமுகமானது நாட்டின் முதன்மை கடல்வழி வர்த்தக மையமாகும். 

துறைமுகத்தில் தற்போது அவசரகால நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »