Our Feeds


Tuesday, March 17, 2026

Zameera

வாக்குறுதியை மீறிய ஜனாதிபதி - சாகர காரியவசம்


 கடந்த வாரம் வழங்கிய வாக்குறுதியை ஒரு வாரம் முடிவதற்குள்ளேயே மீறும் ஒரு ஜனாதிபதி இந்த நாட்டிற்கு கிடைத்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இளம் தொழில்முனைவோர் வர்த்தக சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க மாட்டேன் என இருமுறை உறுதியளித்த போதிலும், அந்த வாக்குறுதி ஒரு வாரத்திலேயே மீறப்பட்டுள்ளது.

நாட்டின் தொழில்முனைவோர் பொருளாதாரத்திற்கு எவ்வாறு பங்களிக்கிறார்கள் என்பது கூட புரியாத ஒரு ஜனாதிபதி நாட்டை வழிநடத்துவது கவலைக்குரியது.

கடந்த காலங்களில் கொவிட் பெருந்தொற்று மற்றும் உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அப்போதைய அரசாங்கம் மக்களுக்கு தடையின்றி உணவு மற்றும் எரிபொருளை வழங்கியதை நினைவுபடுத்திய அக்காலப்பகுதியில் ஜே.வி.பி உள்ளிட்ட தரப்பினர் போராட்டங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததாகக் குற்றஞ்சாட்டினார். 

ஆனால் இன்று எவ்வித பாரிய நெருக்கடிகளும் இல்லாத சூழலில், எரிபொருள் வரிசைகளை உருவாக்கி, ஞசு குறியீடுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் குழப்பமான நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »