Our Feeds


Thursday, March 5, 2026

SHAHNI RAMEES

வல்லரசுகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக அதிகார ஆதிக்கத்தை கையில் எடுப்பது முற்றிலும் தவறு! - இஸ்திஹார்


மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்மயமான

நிலைமை தொடர்பாக தற்போதைய அரசு மேலும் பொறுப்புடன் மற்றும் தெளிவாக மனிதாபிமான அடிப்படையில் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. 


அப்பாவி பொதுமக்களின் மற்றும் குழந்தைகளின் உயிர்களுடன் விளையாடுவதை உடனே நிறுத்துங்கள் – வல்லரசுகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக அதிகார ஆதிக்கத்தை கையில் எடுப்பது முற்றிலும் தவறு. 


இது அடுத்த தலைமுறைக்கு அளிக்கப்படும் மிக மோசமான முன்னுதாரணம்! -இஸ்திஹார்


🇮🇷 ஈரான், 🇮🇱 இஸ்ரேல் மற்றும் 🇺🇸 அமெரிக்கா ஆகியவற்றை உள்ளடக்கிய மத்திய கிழக்கு நாடுகளில்  உருவாகியுள்ள பதற்றம் ; உலக அமைதி மற்றும் சர்வதேச பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. ⁉️


போர் ஒரு நாட்டிற்கு நிரந்தர வெற்றியை தர முடியாது. இது போன்ற மோதல்கள் சாதாரண குடும்பங்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வை சீர்குலைக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு இப்போரில் சிக்கி பலியாகிய 165 அப்பாவி பாடசாலை சிறுமிகளின் சடலம் இதற்கு சாட்சி கூறுவதோடு இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்கள நான் வன்மையாக கண்டிக்கிறேன். மறைந்த அனைவரின் மறுமை வாழ்வையும் அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பானாக! 


சில அதிகாரமிக்க நாடுகளின் பொருலாதாரத்தை பலப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ஆதிக்கதனமான ; இதுபோன்ற அரசியல் செயல்பாடுகள், ஒரு உயிரை கூட மதிக்க தெரியாத கொடுமையான செயல்கள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். 


இலங்கை  ஒரு காலத்தில் போரின் துயரத்தை எதிர்கொண்ட நாடாக இருப்பதால், மோதல்களின் விளைவுகளையும் அழிவுகளையும் ஆழமாக புரிந்துள்ளது. ஆகையால் எங்களின் நிலைப்பாடு எப்போதும் அமைதி, பொறுமையுடன்  மற்றும் தூதரக முயற்சிகள் வழியே தீர்வுகளை நாடுவதாக இருக்க வேண்டும்.


🇱🇰 இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தில் ஈரான் நீண்டகாலமாக பங்காற்றி வருகிறது; குறிப்பாக நெருக்கடியான காலங்களில் வழங்கிய உதவிகள் நினைவில் கொள்ளத்தக்கவை. உமா ஓயா திட்டம் அதற்கு தெளிவான சான்றாகும். மேலும், எங்கள் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கான வெளிநாட்டு நாணய வருவாயில் மிகப்பெரிய பங்கினை வழங்கும் நாடாக ஈரான் உள்ளது.”


இது போன்ற சூழலில் இந்த போர் நிலைமை உலக பொருளாதாரத்திற்கே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவத்தோடு எமது நாட்டிற்கும் இது சாதகமல்ல; எதிர்காலத்தில் பல்வேறு சவால்கள் உருவாகும் அபாயம் உள்ளது.


இந்த நிலையில் நாம் பதற்றமடைாமல், நாட்டின் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி தேவையற்ற பயத்தை உருவாக்காமல், அமைதியுடனும் பொறுமையுடனும் செயல்படுவது அவசியம்.


மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டால், அது உலக பொருளாதாரத்துக்கும் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே அனைத்து நாடுகளும் அதிக பொறுப்புடனும் கட்டுப்பாட்டுடனும் செயல்பட்டு, சர்வதேச சட்டங்கள் மற்றும் தூதரக முயற்சிகள் மூலம் பிரச்சினைகளை தீர்க்க முனைவது அவசியம்.


🇱🇰🕊️உலகிற்கு தேவையானவை போரை நிறுத்துதல்!கொலைகளை நிறுத்துதல்! பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்! சர்வாதிகார  நாடுகளின் ஆதிக்க அரசியலை நிறுத்துதல்! இலங்கை எப்போதும் அமைதிக்காக நிற்கும் நாடாக, மனிதாபிமானத்தை மதித்து உலகிற்கு நேர்மறையான செய்தியை வழங்குவோம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »