Our Feeds


Friday, March 6, 2026

Zameera

மத்திய கிழக்கு போர் : இலங்கை மத்தியஸ்த நிலைப்பாடு – ஜனாதிபதி


மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் நிலைமையில் குறித்து , அரசாங்கம் மத்தியஸ்தமான நிலைப்பாட்டை பின்பற்றுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இந்த அவசர நிலைமையை கருத்திற்கொண்டு பக்கசார்பாக செயற்றப்பட மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஈரான் கப்பல் விவகாரத்திலும் மத்தியஸ்தமாகவே செயற்படுகிறோம் என்றும் அதேபோல் மனிதாபிமான செயற்பாடுகளில் இருந்தும் பின் வாங்க போவதில்லை என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலகத்தில் தற்போது (இன்று 05) இடம்பெற்று வரும் விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டார்.
 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »