முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்வதில் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்ட நபர் எதிர்காலத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவையும் கைது செய்வதற்கும் சதி செய்வார்.ஆகவே ஜனாதிபதி அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டன் பல்கலைக்கழகத்துக்கு பட்டமளி;ப்பு நிகழ்வுக்கு சென்றமை தொடர்பில் சமூக செயற்பாட்டாளரான ஓசல ஹேரத் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக லண்டன் பல்கலைக்கழகத்திடமிருந்து பெற்றுக்கொண்ட விடயங்களை மேற்கோட்காட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவை கைது செய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
சமூக செயற்பாட்டாளரான ஓசல ஹேரத் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக லண்டன் பல்கலைக்கழகத்தில் தகவல் கோரியுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டு அந்த பல்கலைக்கழகத்துக்கு வருகைத் தந்தது உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட அழைப்புக்கமைய என்று லன்டண் பல்கலைக்கழகம் பதிலளித்துள்ளது.
ஜனாதிபதி ஒருவருக்கு ஏதேனும் நிகழ்வுகளுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்படும் போது அவருக்கான பாதுகாப்பு மற்றும் ஏனைய வசதிகளை குறித்த இலங்கையே வழங்க வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்வதில் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்ட நபர் எதிர்காலத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவையும் கைது செய்வதற்கு சதி செய்வார் என்று பதிவேற்றம் செய்துள்ளார்.
