Our Feeds


Wednesday, April 22, 2026

Zameera

காவத்தை சம்பவம் : 9 பேர் கைது


 காவத்தை, நீலகாமம் தோட்ட பிரதேசத்தில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டை உடைத்து, அங்கிருந்தவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில், ‘கறுப்பு ஆடை’ அணிந்த கும்பலை சேர்ந்த ஒன்பது பேர் காவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக செயற்பட்ட பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பிரதிப் பொலிஸ் மா அதிபரைத் தொடர்புகொண்டு கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன.


பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவும், பெருந்தோட்டப் பகுதிகளில் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுக்கவும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனப் பிரதி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.


கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் காவத்தை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »