நாட்டின் பல பகுதிகளில் இன்று (27) மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, மேல், சபரகமவ, மத்திய, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியடன் கூடிய மழையும் மின்ன்ல தாக்கமும் ஏற்படும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
