Our Feeds


Thursday, April 30, 2026

Sri Lanka

பிரதான எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டம் மாளிகாவத்தையில் - பிரமாண்ட ஏற்பாடுகளை பார்வையிட்டார் சஜித்



சர்வதேச தொழிலாளர் (மே) தினம் நாளை அனுஷ்டிக்கப்படும் நிலையில் இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய மே தினக் கூட்டம் இடம்பெறும் கொழும்பு, மாளிகாவத்தை பீ.டி.சிரிசேன விளையாட்டு மைதானத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (29) விஜயம் செய்து ஏற்பாடுகளை பார்வையிட்டார்.


இம்முறை மே தின கூட்டத்தின் பிரதான மேடை அரங்க தயார்படுத்தல் நடவடிக்கை உள்ளிட்ட ஏனைய ஏற்பாட்டு விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவனம் செலுத்தினார். 


ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். எம். மரிக்கார் மற்றும் முஜிபுர் ரஹுமான் மற்றும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த பிரதேச மட்ட அரசியல் பிரமுகர்கள் சிலரும் எதிர்க்கட்சித் தலைவருடன் இவ் விஜயத்தில் பங்கேற்றிருந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »