Our Feeds


Thursday, April 30, 2026

SHAHNI RAMEES

பாடசாலை மாணவிகளின் சீருடைகளின் மீது மையைத் தெளித்த நபர் கைது!

 




காலியில் தனியார் பாடசாலை ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், வீதியில் சென்ற மாணவிகளின் வெள்ளை நிறச் சீருடைகளில் சிவப்பு மையினைத் தெளித்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர்

ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குறித்த சர்வதேசப் பாடசாலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே ஆசிரியராகப் பணியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


காலியில் சாரேவன்துக்கடை சந்தியில் வைத்து, அங்கு சென்ற பல மாணவிகளின் சீருடைகளின் பின்புறத்தில் இவர் சிவப்பு மையினைத் தெளித்துள்ளார்.


இந்தச் செயல் அங்கிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது. குறித்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.


சமூக ஊடகங்களில்  பரவிய காணொளி மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த காலி பொலிஸார், சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.



கைது செய்யப்பட்ட ஆசிரியரை காலி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காலி பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »