Our Feeds


Tuesday, April 7, 2026

SHAHNI RAMEES

ஊழல் குற்றச்சாட்டில் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கைது!

 


நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் (இ.தொ.கா)

உறுப்பினர் வேலு யோகராஜ், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். 


குறித்த பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அபிவிருத்திப் பணிகளுக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் போது, தேசிய அரசுப் சபையால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், 2021ஆம் ஆண்டில் அரசிற்குச் சொந்தமான நிலமொன்றில் கட்டுமானத் திட்டத்திற்கு அனுமதி வழங்கி, விண்ணப்பதாரருக்குச் சாதகமாகச் செயற்பட்டதன் மூலம் 'ஊழல்' செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »