Our Feeds


Thursday, April 2, 2026

Zameera

ஈரான் போரின் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்த வேண்டும்


ஈரான் மீதான போரில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் தமது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் வலியுறுத்தியுள்ளார். 

“இராணுவ வழிமுறைகளால் ஒரு பிரச்சனைக்கு தீர்வை காண முடியாது. மோதல்கள் தீவிரமடைவது இரு தரப்புக்கும் நலன் பயக்காது. சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பில் மேலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க அனைத்துத் தரப்பினரும் முயற்சிக்க வேண்டும் என்றும் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »