Our Feeds


Thursday, April 23, 2026

Zameera

இலங்கை, ஈரான் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல்


 ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பஸ் அரக்சி மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையே தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தத் தொலைபேசி உரையாடலின் போது, ஐரிஸ் டெனா என்ற கப்பலில் இருந்த மாலுமிகளை மீட்பதற்கான நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும், அந்தக்கப்பலின் பணியாளர்கள் மற்றும் ஏனைய ஈரான் கடற்படை அதிகாரிகளின் உடல்களை ஈரானுக்குத் திருப்பி அனுப்புவதற்கு வழங்கிய ஒத்துழைப்பிற்காகவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்ததாக இலங்கையிலுள்ள ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஈரான் வெளிவிவகார அமைச்சர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக இழைத்ததாகக் கூறப்படும் குற்றங்களைச் சுட்டிக்காட்டியதுடன், 'ஐரிஸ் டெனா' கப்பல் மீதான தாக்குதலானது அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட 'முன்னெப்போதும் இல்லாத போர்க்குற்றம்' என்றும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படை விதிகள் மற்றும் 1949 ஜெனீவா உடன்படிக்கைகளை கடுமையாக மீறும் செயலாகும.

இந்தக் குற்றத்தை ஈரான் ஒருபோதும் மறக்காது.

மேலும், இதற்குப் பொறுப்பான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அனைத்து சட்ட மற்றும் அரசியல் வழிமுறைகளையும் ஈரான் பயன்படுத்தும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி இதன்போது சுட்டிக்காட்டினார்.

வெளிவிவகார அமைச்சர்களான அப்பாஸ் அரக்சி மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »