அமெரிக்கா - ஈரான் போர் 5 வாரங்களை தாண்டியுள்ள நிலையில், ஈரானுக்கு இறுதி கெடுவை டிரம்ப் விடுத்து இருந்தார். டிரம்ப் தனது வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு நிறைவடைய 48 மணி நேரம் மட்டுமே இருக்கிறது.
நேரம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 48 மணி நேரத்துக்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யுங்கள் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து விடுங்கள்.இல்லாவிட்டால் ஈரான் நரகமாக மாறும் என்று எச்சரித்து இருந்தார். இதற்கேற்ப, அமெரிக்க வீரர்களும் தாக்குதலுக்கு தயாராகி வருவதால் மேற்கு ஆசியாவில் உச்சக்கட்ட போர்ப் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் கெடுவை ஈரான் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஈரான் கூறுகையில், அமைதி ஒப்பந்தத்தை ஏற்காவிடில் ஈரானின் உள்கட்டமைப்புகள் அழிக்கப்படும் என்ற டிரம்பின் மிரட்டல் முட்டாள்தனமானது. டிரம்ப் பதட்டமாகவும், கையறுநிலையில் இருக்கிறார்”என்று சாடியுள்ளது. மேலும், அமெரிக்காவிற்கு நரகத்தின் கதவுகள் திறக்கும் என ட்ரம்பின் பாணியில் பதில் மிரட்டலை ஈரான் விடுத்துள்ளது.
