Our Feeds


Sunday, April 5, 2026

SHAHNI RAMEES

F35 போர் விமானத்தில் இருந்து குதித்த அமெரிக்க வீரர் ஈரானில் இருந்து பத்திரமாக மீட்பு: டிரம்ப்

 


ஈரானுக்கும், அமெரிக்கா-இஸ்ரேலுக்கும் இடையிலான

போர் நேற்று 6-வது வாரத்தில் நுழைந்தது. ஏவுகணை தாக்குதல் நடத்த முடியாத அளவுக்கு ஈரான் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் அதற்கு மாறாக, ஈரான் தனது போர்திறனை காண்பித்து வருகிறது. நேற்று முன்தினம் ஈரானில் எப்-15 ‘ஸ்ட்ரைக் ஈகிள்’ ரக அமெரிக்க போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது.


அதில் 2 அமெரிக்க வீரர்கள் இருந்தனர். ஒரு வீரர் உயிருடன் மீட்கப்பட்டார். மற்றொருவரை காணவில்லை. அவரை அமெரிக்க படையினர் மலைப்பகுதியில் தேடி வருகின்றனர். அந்த வீரரை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைக்குமாறு ஈரான் மக்களுக்கு ஈரான் வேண்டுகோள் விடுத்துள்ளது.



அப்படி ஒப்படைத்தால் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்தது. போர் விமானத்தில் இருந்து குதித்த அமெரிக்க வீரரை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்றும் ஈரான் ஒருபக்கம் வலைவீசி தேடிய நிலையில், அமெரிக்காவும் தனது வீரரை மீட்க முழு வீச்சில் களத்தில் இறங்கியது. 2 நாட்களாக நடந்த தேடுதல் வேட்டையில் அமெரிக்க வீரரை பத்திரமாக மீட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். டிரம்ப் கூறியிருப்பதாவது: “எனது சக அமெரிக்கரை நாங்கள் மீட்டிருக்கிறோம். கடந்த சில மணி நேரங்களில் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் சவாலான மற்றும் தீவிர தேடுதல் வேட்டையை நமது ராணுவம் மேற்கொண்டது. மீட்கப்பட்ட வீரர் பாதுகாப்பாகவும் நல்ல உடல் நிலையுடனும் உள்ளார் . எங்கள் எதிரிகள் அவரை நிமிடத்திற்கு நிமிடம் நெருங்கி வந்தனர். எனினும், அமெரிக்க ராணுவ குழு அவரது இருப்பிடத்தை 24 மணி நேரமும் கண்காணித்து, அவரை மீட்க திட்டமிட்டு செயல்பட்டு வந்தது,” என்று கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »