Our Feeds


Thursday, April 30, 2026

Zameera

சரண குணவர்தனவிற்கு எதிரான ஊழல் வழக்குத் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளின் தீர்ப்பை மே மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்குகளின் தீர்ப்பு இன்றைய தினம் (30) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் அவர்களினால் அறிவிக்கப்படவிருந்தது. 

எவ்வாறாயினும், இந்த வழக்குகளின் தீர்ப்பு மே மாதம் 26 ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

2006 ஆம் ஆண்டு தேசிய லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றியபோது, அந்தச் சபைக்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதில் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இந்த நான்கு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »