Our Feeds


Friday, April 17, 2026

Zameera

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் இன்று இடைநிறுத்தம்


 ( இணையத்தள செய்திப் பிரிவு )


ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை மற்றும் அனைத்து பொதுச் சேவைகளும் இன்று வெள்ளிக்கிழமை (17) ஒரு நாளைக்கு மட்டும் செயற்படாது என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.


திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில்  ஏற்பட்டுள்ள திடீர் கோளாறு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அதனை வழமைக்குக் கொண்டுவருவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களிலும் முன்னெடுக்கப்படும் ஒரு நாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் இன்று இயங்காது என அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »