Our Feeds


Wednesday, April 22, 2026

Sri Lanka

ஆட்சி மாறியது, ஆனால் காட்சி மாறலை. NPP மலையக மந்திரிகள் எங்கே? - காவத்த சம்பவம் தொடர்பில் மனோ காட்டம்.




இரத்தினபுரி மாவட்ட நீலகாமம் தோட்டத்தில், தோட்ட நிர்வாகத்தின்  ஹெல்மட் குண்டர்கள், வீடில்லா மலைநாட்டு தமிழ் பிரஜை கட்டிய வீட்டை  உடைத்து, அப்பாவிகளை தாக்கியுள்ளார்கள். 


கோதாபய ஆட்சியில் இப்படியான பல அராஜக சம்பவங்களை நான் நேரில் போய் நிறுத்தி உள்ளேன். இப்போது அனுர ஆட்சியிலும் அதே ஹெல்மட் குண்டர்கள் இனவாத அராஜகமா? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கடும் கேள்வி எழுப்பியுள்ளார். 


இன்று இரத்தினபுரி காவத்தையில் நடைபெறறுள்ள அராஜக சம்பவம் தொடர்பில் மனோ எம்பி மேலும் தெரிவித்ததாவது;


"சட்ட விரோதமாக" வீடு கட்டினார் என நிசாந்தகுமார் என்பவர் காவத்தை  பொலிஸாரால் கைதாகி உள்ளார். சம்பவத்தில், காயமடைந்த கணேசன் விஜயகாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 


இரத்தினபுரியில் இருந்து  ஜ.ம.மு உபதலைவர் சந்திரகுமார் தகவல் தந்த உடன் காவத்த பொலிஸ் பொறுப்பதிகாரி பிரேமரத்னவை அழைத்து கடுமையாக சத்தமிட்டேன். 


"..வீட்டு பிரச்சினையை அனுர அரசுடன் நாம் பார்த்து கொள்கிறோம். நீர் தாக்குதல் நடத்திய குண்டர்களை முதலில் கைது செய்யும். கைதான நிசாந்தனை  பிணையில் விடுவியும்." என்றேன். அதன் பின் கைதான நிசாந்தன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 


அரசாங்க மலையக மந்திரிகளை இதில்  லையிடுமாறு கூறுகிறேன்.  


நியாயம் நிலை நாட்டப்படுவதற்கு கீழ் கண்ட நிலைபாடுகள் அவசியம் :


1. தோட்டங்களில் தரிசு காணிகளில், வீடில்லாதோர் தற்காலிக குடியிருப்புகள் அமைக்க உரிமை வழங்க வேண்டும். இந்த உரிமை இப்போது பெரும்பான்மை இனத்தவருக்கு மட்டும் வழங்கப்படுகிறது.  


2. இராணுவத்தில் இருந்து  விலகி வந்தவர்களை கொண்டு தோட்ட நிர்வாகங்கள் குண்டர் படை அமைக்கக் கூடாது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »