Our Feeds


Thursday, May 14, 2026

Zameera

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவு


 தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை (15) வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.

இதற்கமைய, இந்த ஆணைக்குழுவின் இறுதிக்கூட்டம் இன்று (14) நடைபெறவுள்ளது.

ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை நிறைவடைந்தாலும், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை தற்போதைய உறுப்பினர்கள் அந்தப் பதவிகளில் நீடிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க கடமையாற்றினார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றனர்.

அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »