பெரு நாட்டின் தெற்கே பசுபிக் பகுதியில் இன்று (20) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலநடுக்கம் ஐகா பகுதிக்குட்பட்ட பம்பா டி ததே என்ற நகரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 20 கி.மீ. தொலைவில், 56.5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால், 27 பேர் காயமடைந்து உள்ளனர். எனினும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
