Our Feeds


Thursday, May 21, 2026

Zameera

பொறியியலாளர் சங்கம் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில்


 வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள் சங்கம், சம்பள முரண்பாடு உள்ளிட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் (21) முதல் காலவரையறையற்ற தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.

தங்களது கோரிக்கைகள் தொடர்பாக இதற்கு முன்னர் அதிகாரிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அந்தப் பேச்சுவார்த்தைகளின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும், இதன் காரணமாகவே இந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் உமேஷ் அளுத்பல, 

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் போன்ற வெளிவாரியான குழுக்களில் பங்கேற்பதில் இருந்து பொறியியலாளர்கள் விலகியிருப்பார்கள் எனத் தெரிவித்தார்.

தேசியத் தேவைகளைக் கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வந்த மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் நேரடியாகத் தொடர்புபடாத பணிகளாக இருந்த போதிலும், RDA சட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வமாக ஒதுக்கப்படாத செயற்பாடுகளில் இருந்தும் விலகியிருக்க பொறியியலாளர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தத் தீர்மானம் காரணமாக திட்ட ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என எச்சரித்த அளுத்பல, அதிகாரிகள் இதற்கான தீர்வை வழங்கத் தவறினால் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »