Our Feeds


Friday, May 15, 2026

Zameera

அம்பாறையில் மீண்டும் எரிபொருள் வரிசை



மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது.



குறிப்பாக அம்பாறையில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்னால் மாலை முதல் காலை வரை நீண்ட வாகன வரிசை காணப்படுகின்றது.



சில பகுதிகளில் நேற்று (14) இரவு மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.



தற்போது எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.



எனினும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களே திட்டமிட்டு மீள வாகன வரிசையை ஏற்படுத்தியுள்ளனர் என மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.



எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சிலர் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மீண்டும் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். 



எனினும் சில எரிபொருள் நிலையங்களில் தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக எவ்வித தடையுமின்றி விநியோகிக்கப்படுகிறது.



இது தவிர எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என்பதற்காக ஒரு சில எரிபொருள் நிலையங்களில் இவ்வாறு வரிசைகள் உருவாகியுள்ளதாக குறிப்பிடபப்டுகின்றது.



பாறுக் ஷிஹான்

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »