Our Feeds


Saturday, May 2, 2026

Zameera

நாட்டின் பல மாகாணங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை


 ( இணையத்தள செய்திப் பிரிவு )


நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  


அதன்படி, வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள்


இடியுடன் கூடிய மழையின் போது மரங்களுக்கு அடியில் நிற்காமல், பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் தங்கியிருங்கள்.


நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர் நிலைகள் போன்ற திறந்தவெளிகளில் இருப்பதைத் தவிர்க்கவும்.


இடியுடன் கூடிய நேரங்களில் கம்பி இணைப்புகளைக் கொண்ட தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.


சைக்கிள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.


வீழ்ந்து கிடக்கக்கூடிய மரங்கள் மற்றும் மின்சாரக் கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »