ஈரானுடன் நிலவும் போர்ச் சூழல் தொடர்பில் தனது
பொறுமை எல்லை கடந்து செல்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் மேற்கொண்ட இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து, பீஜிங்கில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அமெரிக்க ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் நெருக்கடியான சூழலைத் தணிப்பதற்கு ஈரான் உடனடியாக ஒரு உடன்பாட்டுக்கு வர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, மத்திய கிழக்கின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி விநியோகத்திற்கு ஏற்பட்டுள்ள தடைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையை திறந்த நிலையில் வைத்திருப்பது மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை தொடர்பில் சீனாவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்
