Our Feeds


Tuesday, June 2, 2026

Zameera

செய்திகள் பல கோடி பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 பேர் கைது


 சுமார் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 13 சீன பிரஜைகளை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 


தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து தாய் ஏர் ஆசியா மற்றும் பத்திக் ஏர் விமான சேவைகள் மூலம் குறித்த சீன பிரஜைகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக 'அத தெரண' விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். 


இதன்படி, விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து குறித்த சிகரெட் தொகையுடன் இவர்கள் சுங்க அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டனர். 


இவர்கள் கொண்டு வந்த 22 பயணப் பொதிகளில் இருந்து ஒரு லட்சத்து 89,600 சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த பெறுமதி சுமார் 2 கோடியே 84 லட்சத்து 40,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. 


கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் 28 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட வர்த்தகர்கள் என விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »