Our Feeds


Monday, June 15, 2026

Zameera

கட்டுகஸ்தோட்டையில் பாடசாலை வேன் விபத்து - 17 பேர் வைத்தியசாலையில்

கண்டி – யாழ்ப்பாணம் A-9 வீதியின் கட்டுகஸ்தோட்டை, கலுகல பகுதியில் இன்று (15) பிற்பகல் பாடசாலை வேனும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 17 பாடசாலை மாணவ, மாணவிகளும் வேன் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கட்டுகஸ்தோட்டை பிரதேச வைத்தியசாலையிலும், கண்டி தேசிய வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »