Our Feeds


Friday, June 19, 2026

Zameera

அமெரிக்கா - ஈரான் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று சுவிட்சர்லாந்தில் ஆரம்பம்!


 அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான முதற்கட்டப் பேச்சுவார்த்தை இன்று வெள்ளிக்கிழமை (19) சுவிட்சர்லாந்தின் பேர்கன்ஸ்டாக் நகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.


அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து முதற்கட்டமாக ஆராய்வதே இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும்.


பரிந்துரைக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் மேலதிகமாக மத்தியஸ்தர்களாக கத்தார் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் கலந்துகொள்ளவுள்ளன.


இதேவேளை, இச்சந்திப்பு நடைபெறவுள்ள கால அட்டவணை அல்லது இதில் உள்ளடக்கப்பட்டுள்ள விரிவான விடயங்கள் குறித்து இதுவரையில் வேறு எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை என சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


மத்திய கிழக்கு பிராந்தியத்தை உலுக்கியுள்ள போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கையெழுத்தாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.     

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »