திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள பள்ளவக் குள மக்கள் குடி நீரின்றி தவிப்பதாக கடந்த வாரம் தெரிவித்திருந்ததை அடுத்து குறித்த பிரச்சினை ஊடகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை அடுத்து குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாரக் உரிய பகுதிக்கு கள் விஜயம் செய்து குடி நீரை வழங்கி பிரச்சினையை தீர்த்து வைத்தார்.
முன்னர் செய்தி - சுமார் 2004 ம் ஆண்டு குடியேற்றப்பட்ட குறித்த பகுதி மக்கள் தற்போது வரை நிரந்தர குடி நீரின்றியே வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
குச்சவெளி பிரதேச சபை மூலமாக பவுசர் மூலமாக குடி நீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் இரு மாதங்களாக அதுவும் இடை நிருத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து (12) குறித்த பகுதி ஜூம் ஆபள்ளி நிருவாகம்,கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் கூட்டாக தெரிவிக்கையில் நாங்கள் குடி நீரின்றி தவிக்கிறோம் பாடசாலை செல்லும் பிள்ளைகள் பெண்கள் என பலரும் கஷ்டங்களை இதன் மூலம் எதிர்நோக்குகிறார்கள்.
குறித்த பகுதியில் சுமார் 350 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். சுத்தமான குடிநீரை பெறுவதும் மனித உரிமைகளில் ஒன்றாக உள்ளது.
குச்சவெளி பிரதேச சபை மூலமாக குடி நீர் விநியோகம் செய்வதற்காக நிதி விடுவிக்கப்பட்ட போதிலும் இரு மாதங்களாக குடி நீர் விநியோகம் இடம்பெறவில்லை. ஓரிரு வாரங்களுக்குல் குடி நீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் பிரதேச செயலகம்,பிரதேச சபையை முற்றுகையிடுவோம் எனவும் தெரிவித்தனர்.
