Our Feeds


Tuesday, June 16, 2026

Zameera

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


 சீனாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள கிங்ஹாய் மாகாணத்தின் ஹைசி மாவட்டத்தில் 6.3 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

சீன நிலநடுக்க நெட்வொர்க் மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கம் தரைமட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று மாலை 5:06 மணியளவில் (பெய்ஜிங் நேரம்) ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »