Our Feeds


Thursday, June 18, 2026

Zameera

சுரேஷ் சலே விசாரணைக்கு தடையில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால


 சுரேஷ் சலேவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு எந்தவித தடைகளும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் விசாரணைகள் தடுக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை எனவும் கூறினார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் செயல்பாடுகளுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்றும், அதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை என சுட்டிக்காட்டினார்.

மேலும், அரசியல் நோக்கங்களுக்காக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், விசாரணைகள் முறையான முறையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

(எம்.ஏ.அமீனுல்லா)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »