Our Feeds


Monday, June 1, 2026

SHAHNI RAMEES

மெட்ரோ பஸ்களை LIVE Tracking செய்ய புதிய 'LMT GO' செயலி அறிமுகம்!


மெட்ரோ பஸ்கள் தற்போது பயணிக்கும்

இடம் மற்றும் அவை பஸ் நிறுத்தங்களுக்கு வருகை தரும் நேரங்களை பயணிகள் இனி 'LMT GO' தொலைபேசி செயலி ஊடாக நேரலையில் கண்காணித்து அறிய முடியும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.


இந்த புதிய சேவை அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதி அமைச்சர், ஜி.பி.எஸ் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய இந்த சேவையின் மூலம், பஸ்கள் எப்போது தத்தமது நிறுத்தங்களுக்கு வரும் என்பதை பயணிகள் சரிபார்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். 


அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 


சேவையில் ஈடுபட்டுள்ள பஸ்கள், அவற்றின் கட்டண விபரங்கள் மற்றும் அடுத்தடுத்த இலக்குகளை சென்றடைவதற்குக் மதிப்பிடப்பட்டுள்ள பயண நேரங்கள் ஆகியவற்றையும் இச்செயலி ஊடாக அறிந்துகொள்ள முடியும்.


பயணிகளுக்கு மிகவும் திட்டமிடப்பட்ட, வசதியான மற்றும் நம்பகமான பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டே இந்த புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 



எனவே, பொதுமக்கள் இந்த புதிய சேவையைப் பயன்படுத்துவதற்கு 'LMT GO' செயலியை தங்களது தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்யுமாறு போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.   

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »