Our Feeds


Monday, June 1, 2026

Zameera

LMT GO செயலியில் பேருந்து கண்காணிப்பு வசதி அறிமுகம்


 பயணிகள் இனி LMT GO செயலி மூலம் மெட்ரோ பேருந்துகளின் நிகழ்நேர இருப்பிடங்கள் மற்றும் வருகை நேரங்களை கண்காணிக்க முடியும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

புதிய சேவையின் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய அவர், GPS தொழில்நுட்பத்துடன் செயல்படும் இந்த வசதி மூலம் பேருந்துகளின் வருகை நேரம், கட்டண விவரங்கள் மற்றும் பயண நேரம் உள்ளிட்ட தகவல்களை பயணிகள் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும் என கூறியுள்ளனர்.

பொதுமக்களுக்கு திட்டமிடப்பட்ட, வசதியான மற்றும் நம்பகமான பயண அனுபவத்தை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கம் என தெரிவித்த அவர், அனைவரும் LMT GO செயலியைப் பதிவிறக்கம் செய்து இந்த சேவையைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »