சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (08) நிராகரித்துள்ளது.
ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, அவரை எதிர்வரும் 22ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
