Our Feeds


Wednesday, July 8, 2026

SHAHNI RAMEES

முன்னாள் ஜனாதிபதி ரணில், கோட்டை நீதவான் நீதிமன்றில்...

 

நீதிமன்ற நடவடிக்கை ஒன்றிற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். 

அரசு பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான முறைப்பாட்டின் விசாரணை முன்னேற்றங்களை இன்று (08) நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அண்மையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அறிவித்திருந்தமைக்கு அமையவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »