அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக, இந்த வழக்கை செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான அரச நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு புதன்கிழமை (8) கொழும்பு கோட்டை நீதிவான் பசந்த அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு, அதன் கோப்புகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் நீதிமன்றுக்கு அறிவித்தனர். நீதிமன்றில் முன்னிலையான சிரேஷ்ட அரச தரப்பு சட்டத்தரணி சமதரி பியசேன, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதால், சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்காக ஒரு திகதியை குறிப்பிடுமாறு கோரிக்கை விடுத்தார்.
Thursday, July 9, 2026
ரணில் விக்ரமசிங்க வழக்கு: சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிக்க செப்டம்பர் 30இல் மீண்டும் விசாரணை
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக, இந்த வழக்கை செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான அரச நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு புதன்கிழமை (8) கொழும்பு கோட்டை நீதிவான் பசந்த அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு, அதன் கோப்புகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் நீதிமன்றுக்கு அறிவித்தனர். நீதிமன்றில் முன்னிலையான சிரேஷ்ட அரச தரப்பு சட்டத்தரணி சமதரி பியசேன, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதால், சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்காக ஒரு திகதியை குறிப்பிடுமாறு கோரிக்கை விடுத்தார்.
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »