Our Feeds


Thursday, July 9, 2026

Zameera

பழைய போகம்பரை வளாகத்தில் புதிய சிறைச்சாலை அமைக்க வர்த்தமானி வெளியீடு


 பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்திற்குள் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்டுள்ளார்.



சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ், 54ஆம் உறுப்புரையின் மூலம் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனிடையே, காலி – மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவது தொடர்பான மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் கடந்த 7ஆம் திகதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது.



இது தொடர்பாக நீதி அமைச்சு தெரிவித்ததாவது, தற்போது மூடப்பட்டுள்ள மஹமோதர வைத்தியசாலையின் ஒரு பகுதியில் தற்காலிக அடிப்படையில் புதிய சிறைச்சாலை இயங்கவுள்ளதாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »