Our Feeds


Tuesday, July 7, 2026

Zameera

காயமடைந்த அதிகாரிகளை நேரில் சந்தித்தார் நீதியமைச்சர்


 நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளை நீதியமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.


நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன  நாணாயக்கார நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, இந்த அதிகாரிகளின் நலம் குறித்து விசாரித்தார்.


வைத்தியசாலைக்குச் சென்ற அமைச்சர், காயமடைந்த அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அவர்களுக்குத் தேவையான ஏனைய வசதிகள் குறித்து அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »