Our Feeds


Thursday, August 6, 2026

Zameera

நெடுந்தீவு கடற்பரப்பில் சிக்கிய 11 இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு


 நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றிரவு (05) அனர்த்தத்திற்குள்ளான இந்திய இழுவைப் படகில் இருந்த 11 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (06) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

சீரற்ற வானிலை காரணமாக நேற்றிரவு குறித்த இந்திய இழுவைப் படகு விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த 11 மீனவர்களும் ஆபத்தில் சிக்கினர்.

இதையடுத்து, இலங்கை கடற்படையினர் உடனடியாக மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், நீண்ட தேடுதல் முயற்சியின் பின்னர் 11 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நெடுந்தீவு கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

மீட்கப்பட்ட மீனவர்களுக்கு தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »