Our Feeds


Sunday, August 16, 2026

SHAHNI RAMEES

கொழும்பிலுள்ள 5 ஹோட்டல்களுக்கு ஷிரான் பாசிக் உரிமையாளர் - விசாரணையில் அதிர்ச்சி

 


கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள

போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்கிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவருக்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் தகவல்கள் வௌிக்கொணரப்பட்டுள்ளன.


இதன்படி கொழும்பு - marine drive வீதியிலுள்ள 5 ஹோட்டல்கள் தனக்கு சொந்தமானதென ஷிரான் பாசிக் வாக்குமூலம் அளித்துள்ளார்.



இந்தநிலையில், சந்தேகநபருக்கு சொந்தமான சொத்துக்கள், போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலும் விசாரணைக்குழு தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.


சந்தேகநபர் தொடர்பான விசாரணைகளை கொழும்பு மத்திய குற்ற விசாரணை பணியகம் முன்னெடுத்து வருகிறது.



சந்தேகநபரை 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



நாட்டிலிருந்து தப்பிச்சென்று துபாயில் தலைமறைவாகியிருந்த ஷிரான் பாசிக், அங்கு கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.



கடந்த நாட்களில் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களுடன் அவருக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »