Our Feeds


Thursday, August 6, 2026

ShortNews

ஓகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!



ஓகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் நாணய மாற்று வீதங்களில் காணப்படும் சவாலான சூழ்நிலைகள் மத்தியிலும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஓகஸ்ட் மாதத்தில் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டாம் என தீர்மானித்ததாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, 2026 ஓகஸ்ட் மாதத்திற்காக தற்போது காணப்படும் விலைகளே தொடர்ந்து செல்லுபடியாகும், 

01. 12.5 கிலோ கிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் - ரூ. 4,465
02. 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் - ரூ. 1,792
03. 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் - ரூ. 835

என தொடர்ந்தும் காணப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »