Our Feeds


Wednesday, August 12, 2026

ShortNews

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (12) காலை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரது விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டிருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »