Our Feeds


Wednesday, August 12, 2026

ShortNews

தங்காலையில் துப்பாக்கிச் சூடு!


தங்காலை, குடவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இன்று (12) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியினால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மீன்பிடிப் படகு உரிமையாளர் ஒருவரின் வீட்டின் மீதே இந்தத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »